5 ஆவது டி20 : உற்சாகத்தில் கத்திய கோலி. முறைத்து நின்ற பட்லர். முற்றிய சண்டை – நடந்தது என்ன ?

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 3 – 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 224 ரன்கள் குவிக்க அதனைத்தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 188 ரன்களை மட்டுமே அடித்ததால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ind

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின்போது ஜாஸ் பட்லர் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான மோதல் மைதானத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த போட்டியின் 13-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசும் பொழுது அந்த ஓவரில் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக பட்லர் விக்கெட் விழுந்தது.

துவக்கத்தில் ஜேசன் ராய் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினாலும், அதன்பின்னர் டேவிட் மலான் மற்றும் பட்லர் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்து ரன்கள் குவித்து வந்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் திருப்புமுனையான அந்த 13 ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்துவீச பட்லர் அந்த பந்தை தூக்கி அடித்து லாங் ஆப் திசையில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆகி பட்லர் வெளியேறினார்.

Buttler 1

அப்போது விக்கெட் விழுந்த உற்சாகத்தில் கோலி பட்லர் பெவிலியன் திரும்பியபோது உற்சாகத்தில் கத்தி கொண்டாடினார். கோலி கத்துவதை பார்த்த பட்லர் அவரை திரும்பி பார்த்தபடி முறைத்துக் கொண்டிருந்தார். மேலும் இருவரும் கோபமான வார்த்தைகளை மைதானத்திலேயே பரிமாறிக்கொண்டனர்.

kohli

பிறகு மோதல் முற்றவே கள நடுவர்கள் கோலியிடம் சென்று பிரச்சனை பெரிதாகாமல் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள். இவர்களுக்கு இடையே நடந்த இந்த மோதல் தற்போது இணையத்திலும் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement