- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 தரவரிசை : விராட் கோலியுடன் சேர்த்து தரவரிசையில் முன்னேற்றத்தை கண்ட இந்திய வீரர் – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் அடிப்படையில் மூன்று வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முடிந்த ஆசியக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் சிலர் முன்னேற்றத்தையும் கண்டுள்ளனர்.

அதுகுறித்த தகவலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஆசிய கோப்பை தொடரில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்த விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 276 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக டி20 பேட்டிங் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறியுள்ள விராட் கோலி தற்போது 15-தாவது இடத்தை பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் மிகப்பெரிய சரிவினை சந்தித்த விராத் கோலி தற்போது பதினைந்தாவது இடத்தை பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் டாப் 10-க்குள் வருவார் என்றும் நம்பலாம். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 14 வது இடத்திலும், சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் உள்ளனர். டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதேபோல் இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் பவுலர்கள் பட்டியலில் 11-ஆவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பவுலர்களின் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரில் இருந்து விலகிய 3 நட்சத்திர வீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு

அதேபோன்று டி20 கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஹர்டிக் பாண்டியா 6 ஆவது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by