5 பதக்கங்களை வென்ற தங்க மங்கைக்கு விமர்சையாக வாழ்த்து தெரிவித்த – கோலி அனுஷ்கா ஜோடி

Heema-1
- Advertisement -

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான ஹீமா தாஸ்(வயது 19) இவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டுவருகிறார். இவர் கடந்த 19 நாட்களில் இந்தியாவிற்காக 5 தங்கப்பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார்.

Heema

- Advertisement -

இதனையடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலதரப்பட்ட பகுதிகளிலும் இருந்து பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் வாழ்த்து மழையில் ஹீமா தாஸ் தற்போது நனைந்து வருகிறார். இந்நிலையில் அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹீமா தாஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : 19 நாட்களில் 5 தங்கப் பதக்கங்கள் வென்ற நீங்கள் ஒரு தங்க மங்கை உங்களுக்கு பாராட்டுக்கள். சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலளித்த ஹீமா தாஸ் நன்றி அனுஷ்கா நான் உங்கள் தீவிர ரசிகை என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஹீமா தாஸ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன்படி கோலி ட்விட்டர் பக்கத்தில் : இது மிகப் பெரிய சாதனை தங்க மங்கை ஹீமாவின் சாதனை அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது. உங்களது வெற்றி தொடர எனது வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement