இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்காவிலும் தங்களது வேலையை ஆரம்பித்த கோலி – அனுஷ்கா ஜோடி

Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

Rohith

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது. வழக்கமாக கோலியுடன் அவர் மனைவி அனுஷ்கா எங்கு சென்றாலும் செல்வது வழக்கம். அப்படி உலக கோப்பை தொடரிலும் அனுஷ்காவை இங்கிலாந்தில் காணமுடிந்தது. அதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அனைத்து நாடுகளுக்கும் இந்திய அணியுடன் அனுஷ்கா பயணம் செய்தார்.

மேலும் அவ்வாறு பயணம் செய்யும் போது தொடருக்கு முன்பாக அவர்கள் இருவரும் ஓய்வினை அனுபவிக்க அந்தந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். அதனை போன்று தற்போது அமெரிக்கா சென்றுள்ள கோலி அனுஷ்கா மியாமி நகரில் வீதிகளில் சுற்றி திரிந்தனர். மேலும் அப்போது அங்கு அவர்களை கண்ட இந்திய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கோலி அனுஷ்கா ஜோடி ரசிகர்களோடு இதுபோன்று புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முதல்முறை அல்ல எந்த நாடுகளுக்கு பயணம் செய்தாலும் அங்கே அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து கோலி கூறுகையில் : இந்தியாவில் நாங்கள் இது போன்று வெளியில் சுதந்திரமாக உலாவ முடியாது ஏனென்றால் நானும் அனுஷ்காவும் பிரபலமானவர்கள் என்பதால் எங்களுக்கு சிக்கல் இருக்கும். அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நாங்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்கிறோம் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement