என்னது கோலிக்கும் அனுஷ்காவுக்கும் டைவர்ஸா ? வைரலாகும் ஹேஷ்டேக் – உண்மை இதுதான்

anushka
- Advertisement -

இந்தியாவின் பிரபல நட்சத்திர ஜோடி விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக காதல் செய்தது 2017 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் விருஷ்கா என்ற செல்லப் பெயரும் உள்ளது.

பிரபலமான இந்த ஜோடியின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து வரும் ரசிகர்கள் தற்போது இவர்களை சீண்டும் விதமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற போவதாக நேற்று #VirushkaDivorce என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. சமூக வலைத்தளத்தில் வேகமாக ட்ரெண்டிங் ஆன இந்த விடயம் குறித்து தற்போது உண்மை வெளிவந்துள்ளது.

- Advertisement -

இவர்கள் இருவரும் வாழ்ந்தது போதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறார்கள் என்பது போல் இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் இது வதந்தி என்று தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் போதும் கூட இதே போன்று இவர்கள் இருவருக்கும் இடையேயான சிறிய பிரிவினை பெரிய விடயமாக கிளப்பிய நெட்டிசன்கள் மீண்டும் அதே வேலையை துவங்கி இருக்கிறார்.

இதுகுறித்து வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்று தெரிவிக்கும் வகையில் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் வீட்டில் சூரிய ஒளி படும் இடங்கள் அனைத்தும் நன்றாக தெரியும் என்று ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன் அல்லவா என்பதுபோல குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு கோலியும் பதில் அளிக்கும் விதமாக ஹார்டின் சிம்பிள்களை கமெண்ட் செய்துள்ளனர் இவர்களுக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை இது அவர்களை பிடிக்காதவர்கள் ஏற்படுத்திய ஒன்று என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement