பெண் குழந்தை பிறந்ததை அறிவித்து ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை போட்ட விராட் கோலி – விவரம் இதோ

Anushka

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட்டுக்கும் தலைமை தாங்கி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அவருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

viratanushka

அதனைத் தொடர்ந்து முன்னர் காதலித்தது போலவே கல்யாணத்திற்கு பிறகும் இருவரும் ஜோடியாக உலகம் சுற்றி வந்தனர். அதன்பிறகு தற்போது இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்க காலத்தில் தனது மனைவி கர்ப்பமுற்று இருப்பதையும் ஜனவரி மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்பதையும் கோலி சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். மேலும் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய இருக்கும் இந்திய அணியுடன் சுற்றுப்பயணத்தில் இருந்த கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் விளையாடி விட்டு பின்னர் தனது குழந்தை பிறப்பதற்காக நாடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்து இருப்பதாக கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியில் ரசிகர்களுக்கு ஒரு அன்பு கட்டளையும் கோலி குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியினால் தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதியினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.

Anushka

அதன்படி அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : நாங்கள் இருவரும் மெய்சிலிர்த்து இந்த செய்தியை உங்களிடம் பகிர்கிறோம். இன்று மதியம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவரது ஆசிர்வாதங்கள், வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள் மற்றும் அன்பு ஆகியவற்றுக்கு நன்றி. எனது மனைவி அனுஷ்காவும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

- Advertisement -

மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம். இந்த நேரத்தில் எங்களது பிரைவஸிக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள் என நம்புவதாக கோலி ரசிகர்களுக்கு ஒரு அன்பு கட்டளையை இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி அவர் வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.