கோலி 254 அடிச்சது தெரியும். ஆனால் சிறப்பான நாளில் வந்த இந்த இன்னிங்ஸ் பற்றி யோசிச்சி இருக்கமாட்டீங்க – புரியலையா ? படிங்க புரியும்

virath-kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

Kohli 4

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. கோலி ஆட்டமிழக்காமல் 254 குவித்தார். ஜடேஜா 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை குவித்துள்ளது.

கோலி அடித்த இந்த இரட்டை சதம் அவருக்கு ஏழாவது இரட்டை சதம் ஆகும். மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்களாக இது பதிவாகி உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையும் மீறி அவர் ஒரு மிகச் சிறப்பான ஒரு உலக சாதனை படைத்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியாது.

Kohli

அந்த சாதனை யாதெனில் தோனிக்கு பிறகு கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கோலி பங்கேற்ற 50-வது டெஸ்ட் போட்டி இதுவாகும். தனது 50-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்து கொண்டாடுவார் என்று ரசிகர்கள் நினைத்து நிலையில் தற்போது அவர் இரட்டை சதமடித்து மேலும் இந்திய கேப்டனாகவும் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளதால் கோலியின் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement