ஒரே சேன்ஸ் மட்டும் குடுங்க. டெஸ்ட் கிரிக்கெட்ல 300 ரன் அடிச்சி காட்டுறேன் – சவால் விட்ட இந்திய இளம்வீரர்

Ind
- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 300 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், தற்போதுவரை இரண்டே இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம்பிடித்திருக்கின்றனர். இதில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரரனா வீரேந்திர சேவாக், 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், 2008ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக என இரண்டு முறை 300 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தியாவிற்காக 300 ரன்கள் அடித்த இரண்டாவது மற்றும் கடைசி வீரராக கருண் நாயர் இருந்து வருகிறார். அவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்திருக்கிறார். அதற்குப் பிறகு ஐந்து வருடங்கள் ஆகியும் ஒரு இந்திய வீரரால்கூட, டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் என்ற சாதனையை படைக்க முடியவில்லை.

Sehwag

இதற்கிடையில் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் முன்னனி பேட்ஸ்மேனாக இருக்கும் கே எல் ராகுல், தன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதைப் பற்றிய கூறிய அவர், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் எனக்கு ஓப்பனிங் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயாமா 300 ரன்களை என்னால் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் மற்றும் கருண் நாயரின் சாதனையை தன்னால் முறியடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கே எல் ராகுல் தற்போது இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளில் மட்டுமே முன்னனி வீரராக திகழ்ந்து வந்தாலும், அவர் இந்திய அணிக்காக முதலில் அறிமுகமானது டெஸ்ட் போட்டிகளில் தான். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான கே எல் ராகுல், ஆரம்பத்தில் புஜாரைப் போல் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக மட்டுமே பார்க்கப்பட்டார். பின்பு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய அவர், அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். அதற்குப் பிறகு 2016ஆம் ஆண்டு இந்திய டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகிய ராகுல், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க ஆரம்பித்தார்.

Rahul

ஆனால் இந்திய அணியில் இளம் வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் சுப்மன் கில்லின் வருகையும், மற்றொரு முன்னனி வீரரான ரோஹித் சர்மாவின் அற்புதமான ஆட்டமும், கே எல் ராகுல் டெஸ்ட் அணியில் இருந்தபோதும், விளையாடப்போகும் பதினொரு பேர் கொண்ட அணியில் அவருடைய இடத்தைப் பறித்தது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே எல் ராகுலுக்கு அதற்குப் பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தகுந்த வீரர்கள் இல்லை என்பதே உண்மையான விஷயம்.

kl rahul murali vijay

ப்ரித்வி ஷா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சொதப்பியதால் அவரும் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட சுப்மன் கில்லும் பெரிய அளவில் ரன்களை எடுக்க தவறி வருகிறார். எனவே தற்போது இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக, கடந்த சில ஆண்டுகளாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே எல் ராகுல் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை ராகுலுக்கு ஓப்பனிங் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் கூறியதைப்போல் இந்தியாவிற்காக 300 ரன்கள் அடித்து சாதனைப் படைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement