பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய வீரருக்கு வாய்பளிக்காத இந்திய அணியின் நிர்வாகம் – ரசிகர்கள் வருத்தம்

INDvsAUS
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வரலாறு காணாத விதத்தில் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டு படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

indvsaus

- Advertisement -

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய மிக மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்ததாகவும் அதனால் 2வது டெஸ்ட் போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கேப்டன் கோலியும் முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியதால் நாளைய போட்டிக்கான அணியில் நிறைய மாறுதல்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பில் நாளைய போட்டியில் தொடக்க வீரராக ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக சுப்மன் கில் அறிமுகமாக இருக்கிறார். அதேபோன்று காயம் காரணமாக விலகிய முகமது ஷமிக்கு பதிலாக சிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விக்கெட் கீப்பர் சஹாவிற்கு பதிலாக வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியின் இடத்தில் ஜடேஜா தேர்வாகி உள்ளார்.

gill 1

ஆனால் விராட் கோலியின் இடத்திற்கு முன்னதாக ராகுல் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என இரண்டிலும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ராகுலுக்கு இந்த டெஸ்ட் தொடரில் விளையாட இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருக்கும் ராகுல் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ராகுல் எந்த இடத்தில் இறங்கினாலும் தனது சிறப்பான ரன் குவிப்பை வழங்கி வருகிறார். அதனால் நிச்சயம் அவர் இரண்டாவது போட்டியில் களமிறங்கி பெரிய அளவில் ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்துள்ளது. இவர் ஒருவரைத் தவிர முக்கிய மாற்றங்களாக இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahul 2

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இதோ :

1) ரஹானே, 2) அகர்வால், 3) கில், 4) புஜாரா, 5) விஹாரி, 6) பண்ட், 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) பும்ரா, 10) உமேஷ் யாதவ், 11) சிராஜ் Advertisement

Advertisement