- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் மட்டும் போதாது.. எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு.. கம்பேக் குறித்து – கே.எல் ராகுல் விருப்பம்

கடந்த ஆண்டு 2024 ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடியிருந்த கே.எல் ராகுல் அந்த அணியில் இருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். ஏற்கனவே டெல்லி அணிக்கு அவர் சென்றபோது தனக்கு கேப்டன் பதவியில் விருப்பமில்லை என்றும் தான் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவும் விளையாட விரும்புவதாக தெரிவித்தார்.

டி20 போட்டிகளில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் ஆசை இருக்கு : கே.எல் ராகுல்

அதனைத்தொடர்ந்து அவர் விரும்பிய படியே முழுநேர பேட்ஸ்மேனாக நடப்பு தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இதுவரை அவர் விளையாடி உள்ள 13 போட்டிகளில் 149 ஸ்டிரைக் ரேட்டுடன் 539 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் கடைசி ஆறு தொடர்களில் ஐந்தாவது முறையாக 500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதோடு நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகழ்ந்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அவர் அந்த தொடரில் துவக்க வீரராகவும் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது மட்டுமின்றி ஒயிட் பால் போட்டிகளிலும் மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து கே.எல் ராகுல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். கடைசியாக டி20 போட்டிகளில் அவர் 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்த அவர் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக டி20 அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாட விரும்புவதாகவும் டி20 கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கே.எல் ராகுல் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைக்கு நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறேன்.

இதையும் படிங்க : இன்னும் 67 ரன்கள் அடித்தால் போதும்.. ஐ.பி.எல் தொடரில் 2 ஆவது வீரராக ரோஹித் சர்மா – படைக்கவிருக்கும் சாதனை

ஆனாலும் எனக்கு டி20 போட்டிகளில் மீண்டும் விளையாட விருப்பம் உள்ளது. 2026 டி20 உலக கோப்பையை என் மனதில் வைத்திருக்கிறேன். நிச்சயம் அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -