தோனி மறுத்தாலும் பெரிய அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தியே ஆகவேண்டும் – கே.எல்.ராகுல் அதிரடி

- Advertisement -

யாருக்கும் தெரியாமல் திடீரென தனது வழக்கமான பாணியில் ஓய்வினை அறிவித்துவிட்டார் தோனி. இந்திய அணிக்காக 16 வருடங்கள் விளையாடி ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பர் ஆகவும் பல சாதனைகள் படைத்தவர்.இவர் 350 ஒருநாள் போட்டிகளிலும் , 98 டெஸ்ட் போட்டிகளிலும் 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார்.

Dhoni

அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து சர்வதேச அளவில் 17 ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறார். அதனைத் தாண்டி ஒரு கேப்டனாக மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றிருக்கிறார். இதனை செய்த ஒரே வீரர் இவர் தான். இப்படி பல சாதனைகளை தோனியின் பெயரில் அடுக்கிக் கொண்டே போகலாம்.

- Advertisement -

ஆனால் இப்படிப்பட்ட ஒரு வீரருக்கு எந்த ஒரு பெரிய இறுதிப் போட்டி இல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்திருக்கிறது என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான கேஎல் ராகுல் தோனியின் பிரியாவிடை போட்டி குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

Dhoni

தோனிக்கு ஒரு மிகப்பெரிய இறுதி போட்டி இல்லாமல் அனுப்பி வைப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனது மனது உடைந்து போய்விட்டது. இந்திய அணிகள் தற்போது இருக்கும் அனைவரும் தோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து தோனிக்கு ஒரு மிகப்பெரிய போட்டியை நடத்தி அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கே எல் ராகுல்.

Dhoni

ஏற்கனவே பி.சி.சி.ஐ தோனிக்கு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரியாவிடை போட்டியை நடத்த முன்வந்துள்ளது. ஆனால் அதற்க்கு தோனியின் சம்மதம் தேவை. எது எப்படி இருந்தாலும் அவரை கவுரவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி கட்டாயம் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement