தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது காதலியுடன் கொண்டாடிய ராகுல் – புகைப்படங்கள் இதோ

Rahul

இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பாகக் கொண்டாடி அதனை தங்களது சமூக வலைதளத்தின் பதிவிட்டுள்ளனர். அதில் முக்கியமாக கவனத்தை ஈர்த்த பதிவாக பாண்டியாவின் நிச்சயதார்த்தம் மற்றும் பண்ட் அவரின் காதலியுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம், தோனி மற்றும் அவரது மனைவி நடனம், கோலி அனுஷ்கா புகைப்படம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது.

athiya 1

athiya 3

athiya 4

Athiya-2

தற்போது இந்திய அணி தொடக்க வீரரான ராகுலின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி ஏற்கனவே பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி என்பவருடன் கிசுகிசுக்கப்பட்ட ராகுல் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை அதியா ஷெட்டி மற்றும் அவருடைய நண்பர்களுடன் தாய்லாந்தில் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

மேலும் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகளின் காதல் பெரிய அளவில் பேசப்பட்டு வர தற்போது அடுத்த ஜோடியாக ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ரசிகர்களிடையே அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விடயத்தை நிரூபிக்கும் வகையில் தற்போது இவர்களது புகைப்படமும் வெளிவந்ததால் அடுத்த இந்திய அணியின் காதல் ஜோடி இவர்கள்தான் என்று பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.