உயர்வு மற்றும் தாழ்வு எதுவாக இருந்தபோதும் ஆதரவளித்த எனது ரசிகர்களுக்கு நன்றி – கே.எல் ராகுல் நன்றி

Rahul
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான கே எல் ராகுல் கடந்த பல ஆண்டுகளாகவே அணியில் இடம் பெற்றிருந்தாலும் கடந்த ஓராண்டாக அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு தொடரிலும் எந்தவகை கிரிக்கெட் போட்டிகள் ஆக இருந்தாலும் சரி முன் நின்று விளையாடும் அவர் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என்பதை நாம் மறுக்க முடியாது. அதே வேளையில் ரோஹித்துக்கு பதிலாக இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பையும் சமீபத்தில் பெற்றார் ராகுல்.

Rahul 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்திய கிரிக்கெட்டிற்கு துவக்கமாக டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமான ராகுல் தற்போது வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் சற்று சொதப்பியதால் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடும் பட்சத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் தொடர்ந்து இந்திய அணியில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வருங்கால இந்திய அணியின் கேப்டனாகவும் மாறுவதற்கு அவருக்கு பெரிய வாய்ப்பு உள்ளது. இதனால் அவருக்குள்ள ரசிகர்களின் பட்டாளத்தின் எண்ணிக்கை தற்போது பெருகிக் கொண்டே வருகிறது.

இதில் குறிப்பிட்டு கூற வேண்டிய சுவாரசியமான விடயம் யாதெனில் ட்விட்டரில் சில தகவல்களையும் பரிமாறும் ராகுலுக்கு அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளது. அந்த எண்ணிக்கை இன்றுடன் 50 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தனது ரசிகர்களுக்கு நிகழ்ச்சியான ஒரு நன்றியை ராகுல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இட்ட பதிவில் : உயர்வு மற்றும் தாழ்வு என எப்போதும் உங்களுடைய ஆதரவு என்னை இந்த பயணத்தை நோக்கி செல்ல சிறப்பாக வழிவகுத்தது. உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. நிச்சயம் நான் உங்களுடைய ஆதரவுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என ராகுல் நிகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement