இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மீண்டு வருவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து பேசிய : கே.எல் ராகுல்
இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அனுபவ வீரரான கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணியானது நாளை நவம்பர் 30-ம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் முதல் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கேப்டன் கே.எல் ராகுல் இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியுடன் இருப்பது குறித்து சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகப்பெரிய வீரர்கள். அனுபவ வீரர்களான அவர்கள் இருவரும் இந்திய அணியுடன் இருப்பது எங்களுக்கு மேலும் நம்பிக்கையை தருகிறது. அவர்களுடைய இருப்பு வீரர்களின் மத்தியில் மிகப்பெரிய பாதுகாப்பான உணர்வையும் தருகிறது.
உண்மையிலேயே அவர்களை தலைமை தாங்கி வழிநடத்த இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்பொழுதுமே நாம் விளையாடும் போது அந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டுமே முக்கியமாக நினைத்து விளையாடுவோம். அந்த வகையில் இந்த தொடரையும் வெல்ல வேண்டி அதே முனைப்புடன் விளையாட காத்திருக்கிறோம்.
இதையும் படிங்க : ஷாஹித் அப்ரிடியின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ
கடந்த டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விகளை மறந்து ஒருநாள் தொடரினை மட்டும் கணக்கில் கொண்டு எங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறோம். நிச்சயம் இந்த தொடரை எங்களால் கைப்பற்ற முடியும் என்றும் கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.



