தோனிக்காக என் உடம்பில் குண்டடியை கூட வாங்கிக்கொள்ள நான் தயார் – இளம்வீரர் நெகிழ்ச்சி

Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமாகி கிட்டத்தட்ட 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகள் என 16 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்ற தோனி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பங்கேற்றார்.

Dhoni

அதன்பிறகு அடுத்த ஓராண்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளும் பெற்று தந்த ஒரே கேப்டனாக பெயர் பெற்றுள்ள தோனி இளம் வீரர்களிடையே பெரும் நன்மதிப்பையும், நற்பெயரையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தோனிக்காக எந்தவித யோசனையும் இன்றி துப்பாக்கி குண்டுகளை கூட தாங்க தயார் என்று இளம் இந்திய வீரர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அந்த வீரர் வேறுயாருமில்லை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான கேஎல் ராகுல் தான். ராகுல் இதுகுறித்துக் கூறுகையில் :

Rahul

கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு வருவது தோனி ஒருவர் மட்டுமே. ஏனென்றால் நாங்கள் அனைவரும் தோனியின் காலத்தில் விளையாடி உள்ளோம். அவர் ஒரு சகாப்தம். இந்திய அணியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து மற்ற உலக கிரிக்கெட் வீரர்களின் மத்தியில் ஒரு தனி கவனத்தைப் பெற்றவர் டோனி.

- Advertisement -

அவருக்காக துப்பாக்கி குண்டுகளை கூட நாங்கள் தாங்க தயார் என ராகுல் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தோனி போன்று ஒரு சிறப்பான வீரரை பல அணிகளும் தேடி வரும் நிலையில் அவர் ஓய்வு பெற்ற பின்னரும் தோனி குறித்த செய்திகள் தினமும் இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement