ஸ்மித் வார்னர் மட்டுமல்ல ஆஸி அணியில் இவரும் டேஞ்சர் தான் – கே.எல்.ராகுல் வெளிப்படை

Rahul

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் குறித்த தகவல்களே அதிக அளவில் பரவிவருகின்றன. ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsAUS

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது தொடரில் விளையாட தயாராக உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை(நாளை) துவங்க உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டதால் இம்முறையும் சில தொடர்களை கைப்பற்ற தீவிரம் காட்டும்.

அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி வாங்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்தி ஆக வேண்டுமென்று மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுல் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

warnersmith

இதுகுறித்து அவர் கூறுகையில் : கொரோனா வருவத்திற்கு முன்பாக நடந்த கிரிக்கெட் போட்டிகளில் சுமார் 14-15 மாதங்களாக தொடர்ந்து அதிக ரன்களைக் குவித்து பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் மார்னஸ் லபுச்சனே. இவரை தெரியாதவர்கள் தற்போது யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

Marnus

இவரும் அச்சுறுத்தலாக இருப்பார். அவரை சமாளிக்க பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர் இவர்கள் அத்தனை திட்டங்களையும் நிச்சயம் வைத்திருப்பர். இருப்பினும் இவர் இந்திய அணிக்கு தலைவலியாக அமைவார்.” என்று ராகுல் கூறினார். மார்னஸ் லபுச்சனே இதுவரை ஆடிய 14 டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 1500 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1,100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.