பும்ராவை இனிமே இப்படி பாராட்டாதீங்க. அவரு என்ன அப்படி செய்ஞ்சிட்டாரு – கே.எல் ராகுல் ஓபன்டாக்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் குவித்தது. இதனால் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 303 ரன்களை குவித்தது.

indvseng

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக ஐந்தாவது நாளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை காரணமாக கடைசி நாளில் ஒரு பந்து கூட வீச படாமல் போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் இளம் வீரரான கேஎல் ராகுல் பும்ரா பார்ம் குறித்து சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பும்ரா சிறப்பாக பந்து வீசுகிறார். மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என ஏன் அவரை நீங்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை அவர் எப்போதுமே ஒரு சிறப்பான பவுலர் தான்.

Bumrah

அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நம்பர் 1 பவுலர் ஆன அவர் ஒரு இன்னிங்சில் விக்கெட்டை எடுக்க வில்லை என்பதற்காக அவரை குறை கூற முடியாது. இனிமேல் அவர் போன்று பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவர் எப்போதுமே ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் தான். அவரால் எந்த ஒரு சூழ்நிலையிலும் இப்பேர்பட்ட போட்டிகளிலும் விக்கெட் எடுக்க முடியும்.

bumrah

இருந்தாலும் நல்ல வீரர்களுக்கு ஒரு சில போட்டிகள் மோசமாக தான் அமையும். அந்த வகையில் அவர் ஒரு சில போட்டிகளில் பும்ரா மோசமாக செயல்பட்டு விட்டார் இருந்தாலும் அவர் எப்போதுமே நம்பர் 1 பவுலர் தான். அதனால் பும்ராவை பாராட்ட வேண்டாம் என்றும் ஒரு சில போட்டிகளில் அவர் சொதப்பி விட்டால் அவரை பார்ம் இழந்து விட்டார் என்றும் கூற வேண்டாம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement