இந்த பயோ பபுள் வந்ததுல இருந்து நாங்க எவ்ளோ கஷ்ட படறோம் தெரியுமா? – கே.எல் ராகுல் வேதனை

Rahul
- Advertisement -

உலகெங்கிலும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் லீக் போட்டிகள் கூட பயோ பபுள் வளையத்திற்குள் தான் நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது மைதானம் முழுக்க ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெறும். இந்த கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரு ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக குறிப்பிட்ட அளவு ரசிகர்களை கொண்டு மட்டும் அல்லது மூடிய மைதானத்தில் என பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

ashwin 1

- Advertisement -

மேலும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் வீரர்கள் அணியை தவிர்த்து மற்ற பொது இடங்களுக்கோ அல்லது பொது வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அந்த மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள்ளேயே இருந்து விளையாடி வருகின்றனர். இப்படி குறிப்பிட்ட பயோ பபுளில் வீரர்கள் விளையாடுவதால் மனரீதியாக பாதிக்கப்படும் வீரர்கள் சில தொடர்களில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் தொடர்ச்சியாக பயோ பபுளில் இருந்து விளையாடி வருவதால் என்னென்ன பின்விளைவுகளை சந்தித்துள்ளதாக இந்திய அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான கேஎல் ராகுல் பேசியுள்ளார். வரும் 26-ம் தேதி துவங்கும் 15வது ஐபிஎல் தொடருக்கான லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ராகுல் பயோ பபுளில் இருக்கும் கஷ்டங்கள் குறித்து கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரும் பயோ பபுளில் தான் நடைபெற உள்ளது. தொடர்ச்சியாக பயோ பபுளில் வீரர்கள் இருக்கும்போது உடல் ரீதியான மன ரீதியான மாற்றங்கள் நம்மை வருத்தும்.

Rahul

தொடக்கத்தில் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் கடைசி இரண்டு தொடர்கள் எனக்கு அசௌகரியத்தை கொடுத்தது. இருப்பினும் என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வது சற்று கடினமாக ஒன்றாகவே இருந்தது. பயோ பபுளில் இருக்கும் நாட்களில் நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். கிரிக்கெட்டை தவிர நமக்கு வேறு ஏதும் தெரியாது எனவே இந்த சூழலில் இருந்துதான் பழகிக்கொள்ள வேண்டும் என எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

- Advertisement -

குறிப்பாக இப்படி தொடர்ச்சியாக பயோ பபுளில் விளையாடும்போது குடும்பத்தை நாம் ரொம்பவே மிஸ் செய்வோம். அதேபோன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் மிஸ் செய்வோம். சக வீரர்களுடன் பேசியபோது இந்த விடயங்கள் அவர்களிடமும் இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆனாலும் நாம் இயல்பாக இருக்க நம்முடைய நண்பர்கள், குடும்பம் என அவ்வப்போது நாம் தூரத்தில் இருந்தாலும் பேசிக்கொள்வது இயல்பாக வைத்திருக்கும்.

இதையும் படிங்க : அவங்க வீக் டீம், இம்முறை அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு போகாது – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

அதை தவிர்த்து தூங்குவது, எழுவது, பயிற்சி செய்வது என இதையேதான் தொடர்ந்து பயோ பபுளில் செய்து வருகிறோம். அதன் காரணமாக நாங்கள் எங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளதாக தோன்றுவதாக ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் அவர் கூறுவது போன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனா வைரஸ் பரவ கூடாது என்பதால் தொடர்ச்சியாக பயோ பபுளில் தான் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வெளி உலக வாழ்க்கையை இழந்து சற்று இறுக்கமான சூழலில் தவிக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Advertisement