நடிகையுடன் டேட்டிங் ..! காதல் வலையில் சிக்கிய பஞ்சாப் அதிரடி வீரர்..? – வைரலாகும் புகைப்படம்

karan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் உலகில் பல பேர் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளனர். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கங்குலி, சாகீர் கான் தொடங்கி இன்று இருக்கும் கோலி வரை காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளனர். அந்த வரிசையில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரரான கே. எல் ராகுலும் காதல் கிசுகிசுவில் விழுந்துள்ளார்.
KL-Rahul
நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வந்த இவர், அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இருந்து வந்தார் . அந்த அணியில் 16 போட்டிகளில் ஆடிய இவர் 659 ரன்களை குவித்துள்ளார், அதில் 6 அரை சதமும் அடங்கும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

சமீபத்தில் இந்த இளம் வீரர் இந்தி நடிகையான நிதி அகர்வால் என்பவருடன் ஊர் சுற்றிய புகைப்படம் ஒன்று கிரிக்கெட் உலகில் வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் நடிகையான நிதி அகர்வால் இந்தியில் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘முன்னா மைக்கேல்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் ஹிட்டாகாத போதிலும் இவரது அழகான முகம் இந்தி ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்தது.

- Advertisement -

தற்போது இவர்களை பற்றி வந்த கிசுகிசுக்கள்படி இவர்கள் இருவருக்குமே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும். இதனால் இவர்கள் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது . ஆனால் இந்த தகவலை குறித்து ராகுலோ அல்லது நடிகை நிதி அகர்வாலோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளனர்.
Nidhhi-Agerwal-1

Advertisement