விக்கெட் கீப்பராக தோனியின் சாதனையை முறியடித்த ராகுல். அட இப்படி ஒரு சாதனையா ? – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

rahul 3

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த இரண்டாவது போட்டி நாளை 8 ஆம் தேதி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் விளாசிய இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தோனியின் சாதனையை ஒன்றை முறியடித்துள்ளார். அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகி உள்ளது.

இதற்கு முன்னதாக தோனி அடித்த 85 ரன்களே நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதனை பின்னுக்குத்தள்ளி தற்போது ராகுல் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் தோனியைப் போலவே அசத்தலான ஸ்டம்பிங் ஒன்றையும் செய்து அசத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement