இரண்டாவது ஒருநாள் போட்டி : விராட் கோலி தவறவிட்டதை செய்து முடித்த கே.எல்.ராகுல் – விவரம் இதோ

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது. இதனால் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

toss

- Advertisement -

இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் அடுத்தடுத்து ஆட்டம் இருந்து வெளியேறினர். போட்டியின் ஆரம்பத்திலேயே தவான் 4 ரன்களிலும், ரோகிக் 25 ரன்களில் வெளியேறினர். அதன்பின்னர் கேப்டன் கோலி இளம் வீரரான ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ராகுல் ஜோடி 121 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்தப் போட்டியிலும் அரைசதத்தை கடந்த விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தை அளித்தார் 79 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கோலி வெளியேறினார். கோலி வெளியேறிய பின்னரும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ராகுல் பண்ட்டுடன் சேர்ந்து விரைவாக ரன்களை குவிக்க தொடங்கினார்.

Rahul

ஒருபுறம் ராகுல் சிறப்பாக விளையாடி செஞ்சுரி அடிக்க மறுபுறம் ரிஷப் பண்ட் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 40 பந்துகளில் 7 சிக்சர் 3 பவுண்டரி என அமர்க்களப்படுத்தி 77 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் இறுதி நேரத்தில் ஹர்டிக் பாண்டியாவும் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 35 ரன்களை குவித்து அசத்த இந்திய அணி இந்த பெரிய ரன் குவிப்பை எட்டியது.

rahul 2

இந்த போட்டியில் நீண்ட நாட்களாக சர்வதேச சதத்தை எதிர்பார்த்து விளையாடி வரும் கோலிக்கு இந்த போட்டியிலும் அரை சதத்தை கடந்து ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் அவர் விட்ட இடத்தை அப்படியே தொடர்ந்து ராகுல் அரைசதத்தை கடந்த பின்னரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டியில் தனது ஐந்தாவது சதத்தை அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement