இந்திய அணிக்கு தற்போது கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து இவர்தான் – கே.எல் ராகுல் பெருமிதம்

Rahul

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முதலாக விளையாட பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணா மிக சிறந்த வகையில் பந்துவீசி அனைவரது பாராட்டையும் தொடர் முழுவதும் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா குறித்து கேஎல் ராகுல் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கர்நாடக அணியில் அவருடன் நான் முன்னரே விளையாடி இருக்கிறேன்.

trophy

அவர் எப்படி பந்து வீசுவார் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறிய கே எல் ராகுல்,பிரசித் கிருஷ்ணாவின் முதல் போட்டியை பற்றி விவரித்து பேசினார். முதல் போட்டியில் விளையாடிய கிருஷ்ணா தனது முதல் 3.1 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து எந்த விக்கெட்டும் கைப்பற்றாமல் மிக அதிக ரன்களை கொடுத்தார். இருப்பினும் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. தனது முழு கோபத்தை தனது பிற்பாதி ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா காட்டினார்.

அதன் விளைவாக அதற்கடுத்து 5 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்.
இவர் இந்த அளவுக்கு மீண்டுவந்து பவுலிங் போட்ட வேதம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் எனக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் தனது போட்டியில் மிக நிதானமாக இருப்பார்.

prasidh krishna 1

எப்போதும் அணிக்காக தனது முழுப் பங்களிப்பை கொடுத்துக்கொண்டே இருப்பார். அதன் காரணமாகவே தனது முதல் போட்டியில் அப்படி ஒரு பர்பாமன்ஸ்ஸை அவரால் கொடுக்க முடிந்தது என்று கேஎல் ராகுல் கூறினார். மேலும் பேசிய கே எல் ராகுல், இந்திய அணி அவருக்கு இனி அடுத்து அடுத்து வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அதை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகச்சிறந்த நம்பிக்கை வாய்ந்த வீரராக வருங்காலத்தில் பிரசித் கிருஷ்ணா நிச்சயம் வலம் வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

prasidh-krishna

மேலும் இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் தனது முதல் அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது என்பது, அதுவே (பிரசித் கிருஷ்ணா கைப்பற்றிய 4 விக்கெட்) முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.