ஆஸ்திரேலிய தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய நட்சத்திர இந்திய வீரர் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன . இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

rahane 2

இந்தத் தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரர்களான உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மா என பலரும் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார்கள். அந்த வகையில் தற்போது மற்றுமொரு இந்திய அணியின் நட்சத்திர வீரர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக பிசிசிஐ தற்போது தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக கே.எல் ராகுல் காயம் காரணமாக எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து முற்றிலும் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிய ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் இழந்த இடத்தை மீண்டும் பெற்றார்.

இந்நிலையில் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று பெரிதும் எதிர்பார்கப்பத்து. இந்நிலையில் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தபோது கை மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Rahul

இப்படி இந்திய வீரர்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான காயம் அணி நிர்வாகத்தை ஏற்று கவலையடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காயத்தால் தற்போது இந்திய அணி தொடர்ச்சியாக பல ,மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.