தவானுக்கு பதிலாக நாளைய போட்டியின் ஓப்பனர் யார் தெரியுமா ? – நல்ல தேர்வுதான்

Ind-2

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நாளை ஐதராபாத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

ind 3

இந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வில் ஷிகர் தவான் டி20 தொடரின் ஓப்பனராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது காயம் முழுமையாக குணமடையாது காரணத்தால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அதற்கான பதிலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் நாளைய போட்டியில் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ராகுல் டி20 போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் ஏற்கனவே டி20 போட்டியில் 2 சதம் அடித்துள்ளதாலும், ஏகப்பட்ட போட்டிகளில் துவக்க வீரராக அவர் விளையாடியுள்ளதாலும் நாளைய போட்டியில் ராகுலே துவக்க வீரராக இறங்குவார் என்று கூறப்படுகிறது.

Rahul

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் தொடர்ச்சியாக இனி டி20 போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற ஆதரவும் அவருக்கு பெருகி வருகிறது. ஏனெனில் பார்ம் இன்றி தவிக்கும் தவானுக்கு பதிலாக நன்றாக விளையாடும் ராகுலை அந்த இடத்தில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -