IND vs SA : இந்த ஸ்ட்ரைக் ரேட் போதுமா, ரோஹித்துடன் களமிறங்க தகுதியானவன் என நிரூபித்த ராகுல் செய்த சிறப்பான சாதனைகள்

Rahul
Advertisement

அசாம் மாநிலம் கவுகாத்தியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா முதல் போட்டியிலும் வென்றிருந்த காரணத்தால் 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 96 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 43 (37) ரன்களும் கேஎல் ராகுல் 57 (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய சூரியகுமார் 5 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 61 (22) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர்களுடன் விராட் கோலி தனது பங்கிற்கு 49* (28) ரன்களும் தினேஷ் கார்த்திக் 17* (7) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் இந்தியா 237/3 ரன்கள் எடுத்தது.

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma

அதை தொடர்ந்து 237 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க மார்க்ரம் 33 (19) ரன்களில் நடையை கட்டினார். அதனால் ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி மிரட்டலாக பேட்டிங் செய்த டேவிட் மில்லர் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் உடன் இணைந்து 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஸ்ட்ரைக் ரேட் போதுமா:
கடைசி வரை அவுட்டாகாமல் நேரம் செல்ல செல்ல இந்திய பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடியில் 8 பவுண்டரி 7 சிக்சருடன் மிரட்டலாக பேட்டிங் செய்த மில்லர் சதமடித்து 106* (47) ரன்களும் குயின்டன் டி காக் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா போராடி தோற்றது. அதனால் வென்ற இந்தியா சொந்த மண்ணில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை வென்று நிம்மதியடைந்துள்ளது.

KL-RAHUL

முன்னதாக இப்போட்டியில் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் பேட்ஸ்மேன்களின் அதிரடியே இந்தியாவுக்கு வெற்றியை கொடுத்தது. அதிலும் ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்தால் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் பார்மை இழந்து திண்டாடி வரும் கேஎல் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சுயநலமாக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

குறிப்பாக திருவனந்தபுரத்தில் வெறும் 106 ரன்களை துரத்தும்போது 51* (56) ரன்களை எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற மோசமான உலக சாதனை படைத்தார். அந்த நிலைமையில் இப்போட்டியில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கி 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களை 203.57 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளாசிய அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

மேலும் 2019க்குப்பின் இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக உருவெடுத்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் நம்பிக்கை நட்சத்திர கிளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து வரும் அவர் இப்போட்டியில் பார்முக்கு திரும்பும் வகையில் பேட்டிங் செய்த காரணத்தாலேயே அவருக்கு மேலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சதமடித்த மில்லருக்கும் அல்லாமல் சூரிய குமாருக்கும் அல்லாமல் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் 96 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற தவானின் சாதனையை முந்தி ரோகித் சர்மாவுடன் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா : 1750*
2. ஷிகர் தவான் – ரோகித் சர்மா : 1743
3. ரோகித் சர்மா – விராட் கோலி : 1094

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் ஜோடி என்ற உலக சாதனையை ரோகித் சர்மாவுடன் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் – ரோஹித் சர்மா : 15*
2. பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் : 14

kl rahul

மேலும் கடந்த போட்டியில் மெதுவான அரைசதம் அடித்த அவர் இப்போட்டியில் 24 பந்துகளில் சதமடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்தார். இப்படி நல்ல பார்முக்கு திரும்பி தேவையான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிக்க துவங்கியுள்ள அவர் உலக கோப்பையில் தம்மை நீக்கிவிட்டு விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என கோரிக்கை வைத்த விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement