இன்னும் அதுல முன்னேறம் தேவை.. 2023இல் பதிலடி கொடுத்த ராகுல் மீது திருப்தியடையாத வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh Prasad 2
- Advertisement -

நிறைவு பெற்ற 2023 காலண்டர் வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா 2023 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் 2023 ஆசிய கோப்பையை வென்ற இந்தியா பெரும்பாலான இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை துவம்சம் செய்து தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது.

அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான ஐசிசி தரவரிசையிலும் ஒரே சமயத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து அணி என்ற உலக சாதனையும் இந்தியா படைத்தது. அதே போல இந்த வருடம் காயத்தை சந்தித்திருந்த ஜஸ்பிரித் பும்ரா, கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் முழுமையாக குணமடைந்து சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

முன்னேற்றம் தேவை:
குறிப்பாக கடந்த வருடம் துவக்க வீரராக மெதுவாக விளையாடியதால் தடவல் நாயகன் என்று ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட கேஎல் ராகுல் ஃபார்மை இழந்து 2023 ஐபிஎல் தொடரில் காயமடைந்து வெளியேறினார். அதிலிருந்து குணமடைந்து 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சவாலான மைதானத்தில் சதமடித்து தன்னுடைய தரத்தை நிரூபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக சுமாராக விளையாடி வரும் கேஎல் ராகுல் அதிர்ஷ்டத்தால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருவதாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் ட்விட்டரில் மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் அளவுக்கு உச்சகட்ட விமர்சனங்களை வைத்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை வருடங்கள் விளையாடி 40க்கும் குறைவான சராசரியை வைத்திருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று அவரை புள்ளிவிவரத்துடன் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடுமையாக விமர்சித்த உங்களுக்கு கேஎல் ராகுல் பேட்டால் பதிலடி கொடுத்துள்ளதை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என இந்திய ரசிகர் வெங்கடேஷ் பிரசாத்திடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ராகுல் முன்னேற வேண்டும் என்று வெங்கடேஷ் பிரசாத் பதிலளித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணாவையும், அஷ்வினையும் தூக்கிட்டு அந்த 2 பேரை அடுத்த டெஸ்டுக்கு சேருங்க – இர்பான் பதான் கருத்து

“ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடம் அவருக்கு சிறப்பானதாக அமைந்தது. மேலும் சென்சூரியன் நகரில் தன்னுடைய கம்பேக் டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் அற்புதமான ஆட்டத்தை விளையாடினார். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் தம்முடைய உண்மையான திறனை உணர்ந்து நிலைத்தன்மையாக செயல்படுவதற்கு அவர் ஆசைப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement