இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து அசத்தியது. குறிப்பாக 2 போட்டிகளின் முடிவில் சமநிலைப் பெற்ற அத்தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டிசம்பர் 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 271 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குவின்டன் டீ காக் 106 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இந்தியா அதிரடியாக பேட்டிங் செய்து 39.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது.
இந்தியா வெற்றி:
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி 65*, ரோஹித் சர்மா 75*, ஜெய்ஸ்வால் 116* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் இப்போட்டியின் பிட்ச்சில் ஒன்று தென்னாப்பிரிக்கா 400 ரன்கள் அடிக்கும் அல்லது 300க்குள் அவுட்டாகும் என்று எதிர்பார்த்ததாக கேப்டன் ராகுல் தெரிவித்துள்ளார். அது போன்ற பிட்ச்சில் குல்தீப், கிருஷ்ணா நன்றாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவை 300க்குள் சுருட்டி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “டாஸ் வென்ற பின் எங்கள் அணி என்னைப் பெருமையுடன் பார்த்ததாக எனக்குத் தோன்றவில்லை. முதல் 2 போட்டிகளில் எங்களுக்குக் கடினமான சூழ்நிலைகள் இருந்தன. இன்று எங்கள் பவுலர்களுக்கு கடினமான வெளிக்களத்திலிருந்து இடைவெளி கொடுத்ததில் மகிழ்ச்சி. பிட்ச் நன்றாக இருந்தது. அதில் நாங்கள் விக்கெட்டுகளை கொத்தாக எடுத்தோம்”
ராகுல் மகிழ்ச்சி:
“அதிரடியாக விளையாடச் செல்லும் போது ஒன்று 400 ரன்களை சேசிங் செய்ய வேண்டியது வரும் அல்லது அதிக ஷாட்டுகளை அடித்து அவுட்டாக வேண்டியது வரும் என்பது எங்களுக்குத் தெரியும். பிரசித் 2 – 3 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் குல்தீப் அசத்தினார். அப்படித்தான் நீங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அணியைக் கொண்டிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: ரோஹித், விராட் பாய் எனக்கு முதல் 2 போட்டியில் முடியாததை சாதிக்க ஹெல்ப் பண்ணாங்க.. ஜெய்ஸ்வால் பேட்டி
“மிகவும் நன்றாக விளையாடிய டீ காக் 180இல் 120 ரன்களை அடித்தார். அந்த சமயத்தில் பிட்ச் புதிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது. எனவே அவருடைய விக்கெட் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அழுத்தத்தை எப்படி எங்களால் கையாள முடிந்தது என்பது மிகவும் மகிழ்ச்சிளிக்கும் விஷயமாகும். அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா எங்களை அழுத்தத்திற்குள் போட்டது. ஒரு போட்டியில் தோற்றதைப் பற்றி நாங்கள் அதிகம் சிந்திக்காமல் திட்டங்களையும் செயல்முறைகளையும் நிலையாகப் பின்பற்றுகிறோம். அதுவே இன்றும் வேலை செய்தது” என்று கூறினார்.



