- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் யார்ன்னு காமிச்சாலும்.. இந்தியாவின் வெற்றிக்கு அந்த 2 பேர் தான் காரணம்.. ராகுல் பாராட்டு

ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 350 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி சதத்தை அடித்து 135, கேப்டன் ராகுல் 60, ரோஹித் சர்மா 57, ரவீந்திர ஜடேஜா 32 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய தென்னாபிரிக்கா முடிந்தளவு போராடியும் 49.2 ஓவரில் 332 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவுக்கு பயத்தைக் காட்டி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக மேத்தியூ பிரெட்ஸ்கே 72, கோர்பின் போஸ்க் 67, மார்கோ யான்ஸ்ன் 72 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

அசத்திய விராட், ரோஹித்:

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் எதிரணியை சில்லியாக்கி தங்களுடைய தரத்தைக் காண்பித்ததாக கேப்டன் ராகுல் பாராட்டியுள்ளார். அதே சமயம் பந்து வீச்சில் அசத்திய குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டியில் என்னுடைய வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கவில்லை என்று நான் சொன்னால் அது பொய்யாக இருக்கும். நாங்கள் நீண்டகாலம் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதால் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. எங்களுடைய பவுலர்கள் தங்களது திட்டங்களில் நின்றதால் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்தோம்”

- Advertisement -

ராகுல் பாராட்டு:

“அவர்கள் எங்களைக் கடினமாக விளையாடுவதற்காக தொடர்ந்து தள்ளினார்கள். 6வது இடத்தில் விளையாடுவது எனக்கு பரவாயில்லை. அணிக்காக வேலையைச் செய்கிறேன். இந்த வேலை தான் கடந்த 2 – 3 தொடர்களாகவே எனக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. விராட், ரோஹித் ஆகியோர் விளையாடுவதைப் பார்ப்பது எப்போதும் வேடிக்கையாக இருக்கும். எதிரணியை சில்லியாக மாற்றிய அவர்கள் தங்களை யார் என்பதையும் காண்பித்தனர்”

இதையும் படிங்க: 37 வயதிலும் இந்தியாவை வெற்றி பெற வைக்க இதான் காரணம்.. ஆட்டநாயகன் கிங் கோலி பேட்டி

“அதை நான் நீண்ட காலம் பார்த்து வருகிறேன். அவர்கள் இருக்கும் போது எங்களுடைய அணியில் நிறைய வேடிக்கை இருக்கும். ஹர்ஷித் நன்றாக விளையாடினார். அவர்களுடைய திறமை எங்களுக்குத் தெரியும். உயரமான அவர் வேகமாக பந்து வீசி பேட்டிங்கில் கடைசி நேரத்தில் கணிசமான ரன்கள் அடிக்கக்கூடியவர். புதிய பந்தில் முக்கிய விக்கெட்டுகள் எடுப்பதையே அவரிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். குல்தீப் தன்னுடைய வேலையைச் செய்கிறார். அவர் விக்கெட்டுகளை எடுப்பது எங்களுக்கு வெற்றிக்கான சாவியாகும்” என்று கூறினார்.

- Advertisement -