6 ரன்ஸ் தான்.. நான் சொன்னதை செஞ்சுருந்தா சதமடிச்சுருக்கலாம்.. கோலி மிஸ் பண்ணிட்டாரு.. ராகுல் பேட்டி

KL rahul
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் ஆஸ்திரேலியாவை தொடரிலிருந்து வெளியேற்றிய இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 265 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி 84, ஸ்ரேயாஸ் ஐயர் 45, ராகுல் 42* ரன்கள் எடுத்து 48.1 ஓவரில் வெற்றி பெற வைத்தார்கள். முன்னதாக அந்தப் போட்டியில் சவாலான பிட்ச்சில் இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

ராகுல் வகுத்த திட்டம்:

அதனால் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 84 ரன்களில் அதிரடியாக பவுண்டரி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்நிலையில் அந்தப் போட்டியில் நீங்கள் கடைசி வரை நின்று விளையாடுங்கள், நான் ரிஸ்க் எடுத்து அதிரடியாக விளையாடுகிறேன் என்று விராட் கோலியிடம் சொன்னதாக கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால் கடைசியில் விராட் கோலி சதத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயநலமின்றி அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “களத்திற்கு சென்ற நான் 12 பந்துகளை எதிர்கொண்ட பின் நீங்கள் செட்டிலான பேட்ஸ்மேனாக இருப்பதால் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று விராட் கோலியிடம் சொன்னேன். ஒவ்வொரு ஓவரிலும் ரிஸ்க் எடுத்து நான் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறேன் என்றும் அவரிடம் சொன்னேன். ஏனெனில் எங்களுக்கு அந்த நேரத்தில் ஓவருக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது”

- Advertisement -

மிஸ் செய்த கோலி:

“அந்த 6 ரன்களும் 8 – 8.50 ரன்கள் போல இருந்தது. எனவே நீங்கள் ஒரு ஓவருக்கு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தது. அதை நான் எடுக்கிறேன் நீங்கள் ஸ்ட்ரைக்கை மாற்றுங்கள் என்று விராட் கோலியிடம் சொன்னேன். ஒருவேளை அவர் அவுட்டானால் புதிதாக ஒரு பேட்ஸ்மேன் வந்து செட்டிலாகி போட்டியை முடிப்பது கடினமாகி விடும். இருப்பினும் அந்தப் பந்து தனது இடத்தில் இருப்பதாக விராட் கோலி கருதினார்”

இதையும் படிங்க: சச்சின், சேவாக், யுவி போன்ற ஜாம்பவான்களை முந்திய கிங் கோலி.. ஐசிசி நாயகனாக 6 வரலாற்று சாதனை

“ஆனால் அதை சரியாக டைமிங் செய்யாததால் அவர் அவுட்டானார்” எனக் கூறினார். மறுபுறம் அடுத்த சில ஓவர்களில் வேகமாக ஃபினிஷிங் செய்ய நினைத்ததாலேயே அதிரடியாக விளையாடி அவுட்டானதாக விராட் கோலி போட்டியின் முடிவில் தெரிவித்தார். அந்த வகையில் தனது சதத்தைப் பற்றி கவலைப்படாமல் விராட் கோலி அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement