இங்கிலாந்து தொடரில் அசத்தினாலும் கே.எல் ராகுலுக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பில்லை – காரணம் என்ன?

KL Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அனுபவ வீரரான கே.எல் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு சதங்கள் மற்றும் பல்வேறு அரைசதங்கள் என 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருந்தார்.

கே.எல் ராகுலுக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பு இல்லை :

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் கே.எல் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் அவரை டி20 போட்டிகளில் இணைக்க வேண்டும் என்று பலரது மத்தியிலும் ஆதரவுகள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூட ஒரு பேச்சு இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது வரை அவர் டி20 அணியில் இணைய வாய்ப்பே இல்லை என்பது குறித்த ஒரு தகவல் அனைவரிடத்திலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் யாதெனில் : தற்போது இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருப்பது மட்டுமின்றி துவக்க ஆட்டக்காரராகவும் விளையாடி வருகிறார்.

அவருடன் இணைந்து அபிஷேக் சர்மாவும் நிலையான துவக்கத்தை அளித்து வருவதால் அந்த துவக்க ஜோடியை நிர்வாகம் மாற்ற நினைக்காது. அதேபோன்று மிடில் ஆர்டரிலும் திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, ரியான் பராக் என இளம்வீரர்கள் அனைவரும் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால் மிடில் ஆர்டரிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

- Advertisement -

அதனால் கே.எல் ராகுலுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம். அதுமட்டும் இன்றி டி20 அணியில் கே.எல் ராகுல் இடம்பெற வேண்டுமெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் தற்போதைய இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் சஞ்சு சாம்சன் முதன்மை வீரராக இருக்கிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இப்போவே தோனியை தாண்டிட்டாரு.. இனிமே இன்னும் பிரமாதமா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

அவரை தவிர்த்து அந்த இடத்திற்காக இஷான் கிஷன், ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல், ஜித்தேஷ் சர்மா என ஏகப்பட்ட வீரர்கள் வரிசை கட்டி நிற்பதனால் அந்த இளம் வீரர்களை எல்லாம் தாண்டி 33 வயதான கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். இதன் காரணமாகவே அவர் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற முடியாது என்று கூறப்படுகிறது.

Advertisement