தொடர்ச்சியாக சொதப்பும் அதிரடி புயல். இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் அபாயம் – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி தற்போது அகமதாபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் ஆளுக்கு ஒரு வெற்றி பெற்று தொடர் சமநிலை வகிக்கும் நிலையில் இரு அணிகளும் தங்களது இரண்டாவது வெற்றிக்காக இந்த போட்டியில் தற்போதைய விளையாடி வருகின்றனர். மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

INDvsENG

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானம் செய்தது. அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராத் கோலி 46 பந்துகளில் 77 ரன்களையும், ரிஷப் பண்ட் 25 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கியதால் சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது பெறும் வருத்தம் அளிக்கும் செயலாக ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்திய அணிக்காக கடந்த போட்டியில் அறிமுகமான இவர் கடந்த போட்டியில் பேட்டிங் செய்யாமலேயே இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

rahul

அதே வேளையில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான அதிரடி ஆட்டக்காரர் கேஎல் ராகுல் தொடர்ந்து இந்த தொடரில் இரண்டாவது டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இந்த போட்டியில் 4 பந்துகளை சந்தித்த அவர் ரன் குவிக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் போட்டியில் ஒரு ரன்னும் இரண்டாவது போட்டியில் டக் அவுட்டும், மூன்றாவது போட்டியிலும் டக் அவுட் என அடுத்தடுத்து இவர் ஆட்டம் இருந்து வெளியேறி வருவது அணியில் இருந்து நீக்கும் அளவிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

rahul 1

ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய டி20 போட்டியிலும் அவர் ரன் குவிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த நான்கு போட்டிகளில் ஒரு ரன் மட்டுமே அடித்துள்ளதால் நிச்சயம் ராகுல் அடுத்த போட்டியில் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராகவும், மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.