15 வ்ருஷத்துக்கு முன்னாடி இந்த பையன் பெரிய வீரராக வருவான்னு சொன்னேன். இப்போ வளர்ந்து நிக்குறான் – டிராவிட் வியப்பு

Dravid
Dravid

இந்திய அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் ஆடக்கூடிய ஒரு திறமையான வீரர் தான் கேஎல் ராகுல். விராட் கோலி மற்றும்ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து இந்திய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக தற்போது இருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 32 ஒருநாள் 42 டி20 மற்றும் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆரம்ப காலகட்டம் முதலே தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.

rahul 4

தற்போதைய இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருக்கிறார் .பெங்களூரு நகரைச் சேர்ந்த இவர் கர்நாடக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார். மேலும், சிறு வயதில் 13 வயதிற்கு உட்பட்டோருக்கான தொடரில் ஆடிய போது தொடர்ந்து 2 இரட்டை சதங்களை விளாசி ராகுல் டிராவிட்டின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இந்த சம்பவத்தைப் பற்றி தற்போது ராகுலின் சிறுவயது பயிற்சியாளர் ஜெயராஜ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஆண்டர்-13 தொடரில் ஆடிய போது கேஎல் ராகுல் தொடர்ச்சியாக 2 இரட்டை சதங்களை விளாசினார். அதில் இரண்டாவது இரட்டை சதம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளாசினார். அப்போது ராகுல் டிராவிட் அங்கு பயிற்சிக்காக வந்திருந்தார். வலை பயிற்சி செய்து கொண்டிருந்தார். இதன் காரணமாக கேஎல் ராகுலலை டிராவிட்டின் பயிற்சியை வெளியில் அமர்ந்து பார்க்குமாறு கூறினேன்.

rahul 3

ஒருவாரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார் ராகுல். அதன் பின்னர் திடீரென ஒருநாள் பயிற்சியை முடித்த ராகுல் டிராவிட் என்னிடம் வந்து கேஎல் ராகுல் காட்டி, அந்த சிறுவன் மிகச்சிறந்த திறமைசாலி. 2 இரட்டை சதங்களை விளாசி இருக்கிறான். அவனுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவனுக்கு சற்று கூடுதல் கவனத்தை கொடுத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

- Advertisement -

நான் அதற்கு, நேரம் இருந்தால் நீங்கள் அவனிடம் சற்றே பேசுங்கள் என்று கூறினேன். அதனை ஏற்றுக்கொண்டு ராகுலிடம் ராகுல் டிராவிட் பேசினார். தற்போதும் கூட அதனை நினைவில் வைத்திருக்கிறார் ராகுல் என இந்த சம்பவத்தை பற்றி விரிவாக அனாசயமாக கூறினார் கேஎல் ராகுலின் சிறுவயது பயிற்சியாளர் ஜெயராஜ்.

Rahul

இந்திய அணிக்காக 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ராகுல் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2000க்கும் மேற்பட்ட ரன்களும் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் அனாயசமாக பந்துகளை அடித்து நொறுக்கும் அதிரடி ஆட்டக்காரராகவும் ராகுல் விளங்குகிறார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் துவக்க வீரராக தனது அதிரடியை காண்பித்து வருகிறார். சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் தனது பார்மை இழந்ததால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ராகுல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் நிச்சயம் டெஸ்ட் அணிக்கு திரும்பி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rahul

மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதிரடியாகவும், அதேபோன்று இக்கட்டான வேளைகளில் நிதானமாகவும் நிலைத்து நின்று ஆடும் திறனும் ராகுலிடம் உள்ளதால் அவருக்கு இன்னும் மிகப்பெரிய அளவு வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் என்பது உறுதி.