அட்டகாசமான பார்மில் இருந்தும் முதல் டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாதாம் – பாவங்க இவரு

INDvsAUS
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்க உள்ளது. இந்த போட்டியை வெற்றிகரமாக துவங்க இரு அணிகளுமே மும்முரம் காட்டும் என்று தெரிகிறது. மேலும் தற்போது இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான கே.எல் ராகுலுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ள ராகுல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்பான பார்மில் உள்ளார் கிட்டதட்ட தனது வாழ்நாளின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம்.

ராகுல் ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகையாக இருந்தாலும் சரி அதில் துவக்க வீரராக, மிடில் ஆர்டர், பின்வரிசை என எங்கு இறங்கினாலும் சரி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். எனவே இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் விட பிடித்துள்ளதால் இவர் களம் இறங்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதளவு எதிர்பார்த்தனர்.

rahul 3

ஆனால் தற்போது இவர் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் ராகுல் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் துவக்க வீரராக மட்டுமே விளையாட வேண்டும். அந்த இடத்தில் தற்போது அகர்வால், ப்ரித்வி ஷா மற்றும் கில் என மூன்று பேர் இருப்பதால் அவர்களுடன் ராகுலுக்கு போட்டியிட முடியாது. எனவே ராகுல் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

Rahul

மேலும் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பிய திரும்புவதால் இரண்டாவது போட்டியில் இருந்து கோலியின் இடத்தில் ராகுல் இறங்க வாய்ப்பு அதிகம் என்றும் இதனால் முதல் போட்டியில் அவர் நிச்சயம் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ராகுலுடன் தவானுடன் இணைந்து தொடக்க வீரராக ஏற்கனவே பல போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement