- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தெ.ஆ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டன் யார்? சுப்மன் கில் பங்கேற்பது சந்தேகம் – விவரம் இதோ

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே கொல்கத்தா மைதானத்தில் முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டன் யார் ? :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கவுகாத்தி நகரில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்த கையோடு இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பேசப்பட்டு வரும் வேளையில் இந்த ஒருநாள் தொடரை கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக தவறவிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தின் போது காயமடைந்த அவர் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் இந்த ஒருநாள் தொடரை தவறவிடலாம் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் ஒருநாள் தொடரை தவற விடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்க வாய்ப்பில்லை. அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வேறு எந்த வீரரும் செய்யாத தனித்துவமான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

இதன் காரணமாக தற்போதைய ஒருநாள் இந்திய அணியில் சீனியர் வீரராக இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று மற்றொரு அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -