ரோஹித் இருந்தாலும் அகர்வாலுக்கு பதில் ஒப்பனராக இவரே விளையாடுவாராம் – அணிக்கும் வரும் பிரபல வீரர்

ind
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களே தொடரை கைப்பற்றுவார்கள் என்ற நிலை இருப்பதால் இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் பிறகு அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

bumrah

- Advertisement -

அந்த மாற்றங்கள் அனைத்தும் சரியான வழியில் சென்று தற்போது இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய திரும்பிய ரோகித் சர்மா குவாரன்டைன் நாட்களை முடிந்துள்ளதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் மற்றொரு மாற்றமாக இந்திய அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. இளம் வீரர் கில் அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாடுவார். அதே வேளையில் ரோகித் சர்மாவும் மூன்றாவது போட்டியில் இணைவதால் அவர் துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு துவக்க வீரர் இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

Rohith

ஏனெனில் ரோகித் சர்மா ஆரம்ப காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்வரிசையிலேயே விளையாடி வந்தார். ஆனால் இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக அறிமுகமானவர். எனவே அகர்வாலுக்கு பதிலாக ராகுல் மூன்றாவது போட்டியில் அணியுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ரோகித் சர்மா பின்வரிசையில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

Rahul

சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அசத்தலான பார்மில் இருக்கும் ராகுல் டெஸ்ட் போட்டியிலும் இழந்த தனது இடத்தினை மீட்பார் என்று வ்திர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த போட்டியில் நிச்சயம் இந்த இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இற்கு பதிலாக களமிறங்கும் வீரர் யார் ? என்பது குறித்த ஆவலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement