இந்திய அணியில் தோனி விட்டுச்சென்ற இடதிற்கு யார் சரியாக இருப்பார் ? – முன்னாள் வீரர் கைகாட்டும் வீரர் இவர்தான்

Dhoni-kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை மகேந்திர சிங் தோனி அறிவித்த பின்னர் அவரின் இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சமீபத்தில் கிரிக்கெட் தொடரில் தனது ஓய்வினை அறிவித்திருந்தார். இந்நிலையில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இடத்தை அவருக்கு பதிலாக அந்த இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

Dhoni

- Advertisement -

அதில் கே எல் ராகுல் ரிஷப் பந்த் ,சஞ்சு சாம்சன் ஆகியோர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் கே எல் ராகுல். இதையடுத்து அவருக்கு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்க முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் கே எல் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் இந்திய அணியில் நிரந்தர விக்கெட் கீப்பராக ஜொலிப்பார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
நடந்து முடிந்த 2014 -15 ஆம் ஆண்டில் புதுமுக வீரராக ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் அறிமுகமாகி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Rahul

பின்னர் நடைபெற்ற 2018 19 ஆம் ஆண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கேஎல் ராகுல் வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனக்கான இடத்தை இந்திய அணியில் தக்க வைத்துக்கொள்வார்.என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் அஜய் ரத்ரா மற்றும் கவாஸ்கர் பேசியபோது :

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் நிலையில் முன்னுரிமை பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர். கவாஸ்கர் கூறுகையில் கே எல் ராகுல் தற்காலிக கீப்பராக பார்ப்பது சரியானதல்ல எனவும் நிரந்தர விக்கெட் கீப்பர் பதவியை அவருக்கு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

rahul

இதையடுத்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுக்கு ஆனால் அடுத்த இடங்களுக்கு போட்டியாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இருப்பதாக தெரிவித்தார். இருவருமே நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ரிஷப் பந்த் நடந்துமுடிந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சாம்சனின் ஆட்டத்தில் தனக்கு திருப்தி இல்லை எனவும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement