அடுத்த 3 உலகக்கோப்பை வரை என்னால் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் – நட்சத்திர வீரர் நம்பிக்கை

Ind
- Advertisement -

இந்திய அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக செயல்படுவது யார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. துவக்கத்தில் ரிஷப் பண்ட் தோனிக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறங்கி வந்தார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒரு நாள் மற்றும் டி-20 ஆட்டத்தில் மிகவும் மோசமான செயல் பாட்டை வெளிப்படுத்தினார்.

dhoni with pant

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவரது பேட்டிங் படு மோசமானது. அதனால் விக்கெட் கீப்பிங்கும் செயலிழந்து போனது. இதனால் கடந்த ஆஸ்திரேலிய தொடருக்காக பாதியில் பார்ட் டைம் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ராகுல் அந்த தொடரிலும் பேட்டிங்கில் அசத்தினார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து தொடர்களிலும் அவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக ரிஷப் பண்ட் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் தற்போது துவங்க உள்ள 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடருக்கு ராகுல் விக்கெட் கீப்பிங்கை தொடர்வார் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அந்த இடத்தை பிடிப்பது கேள்விக்குறிதான். இந்த தொடர் குறித்து தற்போது பல்வேறு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் என தங்களது கருத்துக்களை பகிர்ந்து வர ராகுல் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் விக்கெட் கீப்பராக இருப்பது இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் இப்படி செயல்பட எனக்கும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விளையாடுகிறேன். எனக்கு கிடைக்கும் வேலையை சரியாக செய்தால் நான் நிச்சயம் அடுத்த மூன்று உலக கோப்பை தொடருக்கு என்னால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்று நம்புகிறேன். என்னை பொருத்தவரை ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் ஒருமுறை யோசிக்கிறேன்.

rahul 4

அந்த போட்டியை அவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறேன். இதனை வைத்து என்னால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடிகிறது. கீப்பிங்கிலும் நான் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறேன். நான் விக்கெட் கீப்பராக செயல்படுவதால் அணியில் ஒரு பந்து வீச்சாளர் அல்லது ஒரு பேட்ஸ்மென் அதிகமாக சேர்க்க உதவுகிறது. எனவே நான் தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்படுவதில் மகிழ்ச்சி என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement