இந்திய அணியில் முக்கியமான 3 பேருக்கும் கொரோனா உறுதி – ராகுலுக்கு அடித்த ஜாக்பாட்

Rahul
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜூன் மாதம் துவக்கத்தில் இங்கிலாந்து சென்றடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கவுள்ளது.

INDvsENG 1

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் ஓய்வு உள்ளதால் இந்திய அணி வீரர்களுக்கு சுமார் மூன்று வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி இந்த விடுமுறை நாட்களில் வெளியே சென்ற இந்திய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக சில வீரர்களும், அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பத்து நாட்கள் லண்டனில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், விருத்திமான் சாஹா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்திய அணியில் ராகுல் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Rahul

ஏனெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக எப்படியும் ஒரு வீரர் விளையாடி ஆகவேண்டும். துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் அகர்வால் ஆடினாலும் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு தற்போது உண்டாகியுள்ளது. பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் அந்த மூவருக்கும் கொரோனா தொற்று மீண்டும் பாசிட்டிவ் என்று வந்தாலோ அல்லது உடற் தகுதி பெறாமல் போனாலோ நிச்சயம் ராகுல் களமிறங்குவது உறுதியாகி உள்ளது.

kl rahul murali vijay

இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்திய அணி கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் களமிறங்கும். அந்த அணி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியாக அந்த அணியே விளையாடும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement