இவர்தான் என்னோட ஆள். ராகுல் பிறந்த நாள் அன்று அவரது காதலி பதிவிட்ட புகைப்படம்

Rahul
- Advertisement -

பலநாள் மறைத்து வந்த கேஎல் ராகுலின் காதலி யார் என்று தற்போது வெளியே வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருப்பவர் ராகுல். நேற்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவரது நெருங்கிய நண்பரான மயங்க் அகர்வால் உடன் இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் வந்து பல கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது இந்திய அணிக்காக ஆடி வருகிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரும் சோதனையையும், கடுமையான பாதையையும் கடந்து வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வெளியே இருந்தார். 2019ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து ஆகி எட்டு மாதங்கள் தடைகள் இருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பெற்று தற்போது இந்திய அணிக்காக ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். இந்த சர்ச்சைகளுக்கு நடுவே பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டியுடன் வலம்வந்தார் கேஎல் ராகுல். இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். ஆதியா ஷெட்டி பிரபல ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் சேர்ந்து ஒரு முறை சுனில் செட்டியை கலாய்த்து ஒரு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடிய ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆதியா ஷெட்டி. அதில் ”என்னுடைய ஆள்” என்று பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக பல நாட்களாக இருவரும் காதலை ஒப்புக் கொள்ளா௳ல் இருந்த இருவரின் காதலும் வெளிப்பட்டுள்ளது.. இந்நிலையில் இந்த பதிவின் மூலம் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த பதிவு தற்போது வரை 5 லட்சம் லைக்குகளை பெற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

Advertisement