கர்நாடக அரசு சார்பில் கே.எல் ராகுலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ராகுல் தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களாக இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். அவ்வப்போது அணிக்கு வெளியே இவர் தள்ளப்பட்டாலும் தொடர்ந்து தனது திறமையை நிரூபிக்க மீண்டும் மீண்டும் அணியில் இடம்பிடித்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

Rahul

தற்போது இவர் தலைமை வகிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி விட்டது. ஆனால் இவர் மட்டும் ஆரஞ்சு தொப்பியை கனகச்சிதமாக பிடித்துவிட்டார். 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்கள் அடித்து இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட போகும் மூன்று விதமான இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் வரும் ஆஸ்திரேலிய தொடரில் இவர் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் இடம் பிடிப்பார் என்றும் தெரிகிறது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இவருக்கு அந்த மாநில அரசு விளையாட்டில் உயரிய விருதான ஏகலைவா விருதை இவருக்கு அளித்துள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் அதாவது…

என்னை இந்த விருதுக்கு தேர்வு செய்ததில் மிக மகிழ்ச்சி. தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் விளையாட்டிற்கு என்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று கர்நாடக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கே.எல் ராகுல்.

Advertisement