ராகுல் நீங்க பண்ணது ரொம்ப தவறு. அபராதம் விதித்து தண்டித்த ஐ.சி.சி – நடந்தது என்ன ?

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பாக கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று நடைபெற்று முடிந்த நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவிக்க அதன்பின்னர் இங்கிலாந்து அணியானது 2 ஆவது இன்னிங்சில் 368 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Hameed

- Advertisement -

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் அடித்து உள்ள இங்கிலாந்து அணி இன்னும் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் இன்றைய ஐந்தாம் நாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் ராகுலுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான தெளிவான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரரண ராகுல் இரண்டாவது இன்னிங்சில் போது ஆண்டர்சன் பந்து வீச்சில் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். முதலில் நாட் அவுட் என்று தெரிவிக்கப்பட்டாலும் இங்கிலாந்து வீரர்கள் ரெவியூ சென்றனர்.

Rahul-2

அப்போது பந்து ராகுலின் பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்ததால் அவருக்கு அம்பயர் அவுட் கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத ராகுல் அம்பயரை நோக்கி சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டே வெளியேறினார். ராகுலின் இந்த செயல் ஐசிசி விதிமுறையின் 2.8 என்ற விதிமுறையை மீறியுள்ளது.

அந்த ரூல்ஸ் படி அம்பயர்களுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் இதுபோன்று வீரர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதன்படி ராகுலுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும், போட்டி ஊதியத்தில் 15 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement