பாவங்க கேஎல் ராகுல்.. ஆஸியிடம் மீண்டும் 73/5 என இந்தியா ஏ திணறல்.. கேரியரை முடித்த மேஜிக் பந்து?

KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா ஏ கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ வென்ற நிலையில் இரண்டாவது போட்டி நவம்பர் 7 முதல் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி மீண்டும் சுமாராகவே விளையாடி வரும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு மைக்கல் நீசர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி மிகவும் போராடி 223 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தடுமாறும் இந்தியா:

அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 74, ரோச்சிஒலி 35 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் இந்தியா ஏ அணி 2வது நாள் முடிவில் 73-5 என திணறி வருகிறது. அபிமன்யு ஈஸ்வரன் 17, கேஎல் ராகுல் 10, தமிழக வீரர் சாய் சுதர்சன் 3, கேப்டன் ருதுராஜ் 11, தேவ்தூத் படிக்கல் 1 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

களத்தில் துருவ் ஜுரேல் 19*, நிதிஷ் ரெட்டி 9* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் இந்தியா வெறும் 11 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்திய வீரர் கே.எல் ராகுல் சமீபத்திய தொடர்களில் மிகவும் சுமாராக விளையாடினார். அதனால் மோசமான ஃபார்மில் இருக்கும் அவர் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாகவும் அமைந்தார்.

- Advertisement -

மோசமான அவுட்:

அதன் காரணமாக அவரை முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய இந்திய அணி நிர்வாகம் ஃபார்முக்கு திரும்புவதற்காக இப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் அவுட்டான ராகுல் 2வது இன்னிங்சில் 44 பந்துக்களை எதிர்கொண்டு 10 ரன்கள் எடுத்து நங்கூரமாக விளையாடினார். ஆனால் அப்போது ரோச்சிஒலி வீசிய 18வது ஓவரின் முதல் பந்து தரையில் பட்ட பின் ஆஃப் ஸ்டம்ப்பிலிருந்து லெக் ஸ்டம்ப் திசைக்கு திடீரென திரும்பியது.

இதையும் படிங்க: 163க்கு ஆல் அவுட்.. ஃபார்முக்கு திரும்பி ஆஸியை தெறிக்க விட்ட பாக்.. அடிலெய்டில் 28 வருட சாதனை வெற்றி

அதை பேட்டை வைத்து தடுக்க வேண்டிய ராகுல் தடுக்காமல் பந்து எப்படி திரும்புகிறது என்பதை பார்த்தார். அதற்குள் அவருடைய காலில் பட்ட பந்து தொடைகளுக்கு நடுவே சென்று ஸ்டம்பில் அடித்து போல்ட்டாக்கியது. அந்த வகையில் மேஜிக் போல வந்த அந்த பந்தை சுமாராக எதிர்கொண்ட ராகுல் துரதிஷ்டவசமாக போல்ட்டாகி சொதப்பினார். அதை பார்க்கும் ரசிகர்கள் ஏற்கனவே தடுமாறும் ராகுல் கேரியரை முடிக்கும் வகையில் இது அமைவதாக பேசுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement