அப்படின்னா நாங்க மட்டும் வாயை மூட்டிகிட்டு போகனுமா? கண்டித்த அம்பயரிடம் நியாயம் கேட்ட ராகுல்.. நடந்தது என்ன?

Kl rahul 2
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 247 ரன்கள் ஆல் அவுட்டாகி 23 ரன்களை முன்னிலையாகப் பெற்றது . அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64, ஹரி ப்ரூக் 53, பென் டக்கெட் 43 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிராஜ் 4, பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

கண்டித்த அம்பயர்:

முன்னதாக அப்போட்டியில் 22வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா 5வது பந்தின் முடிவில் ஜோ ரூட்டிடம் ஏதோ சொன்னதாக தெரிகிறது. அதற்கு அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்த ஜோ ரூட் அவரிடம் “எங்கிட்ட மோதாதே” என்ற வகையில் மிகவும் கோபமாக பேசினார். பொதுவாகவே அமைதியாக இருக்கக்கூடிய அவர் அந்த சமயத்தில் பொறுமையிழந்து பிரசித் கிருஷ்ணாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

அதைப் பார்த்த நடுவர்கள் உள்ளே புகுந்து சண்டையை தடுத்து நிறுத்தினர். அப்போது கேஎல் ராகுல் தன்னுடைய சக வீரருக்கு ஆதரவாக நடுவர் குமார் தர்மசேனாவிடம் பேசினார். ஆனால் ராகுல் பேசிய விதம் அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் ராகுல் பேசிய விதத்திற்காக அவரை தர்மசேனா கண்டித்தார். அதற்கு ரூட்டையும் சேர்த்து கண்டிக்காமல் கிருஷ்ணாவை மட்டும் கண்டித்த தர்மசேனாவிடம் “களத்தில் நாங்கள் எதுவுமே பேசாமல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக செல்ல வேண்டுமா?” என்று ராகுல் சொன்னார்.

- Advertisement -

வாயை மூடிக்கிட்டு போகனுமா:

அதற்கு போட்டி முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் இப்போது அமைதியாக செல்லுங்கள் என்று சொன்ன தர்மசேனா பிரச்சனையை முடித்தார். இது பற்றி அவர்கள் இடையே நடைபெற்ற உரையாடல்கள் (ஸ்டம்ப் மைக்கில் கிடைத்தது) பின்வருமாறு.
ராகுல்: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அமைதியாக இருக்க வேண்டுமா?

இதையும் படிங்க:

தர்மசேனா: ஏதேனும் பவுலர் வந்து உங்களிடம் நடந்து செல்வதை நீங்கள் விரும்புவீர்களா? எனவே இல்லை ராகுல், நீங்கள் அதை செய்ய முடியாது. நாம் அந்த வழியில் செல்லக்கூடாது
ராகுல்: நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? நாங்கள் வெறும் பேட்டிங், பவுலிங் செய்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டுமா?
தர்மசேனா: நான் போட்டியின் முடிவில் விவாதிப்போம், நீங்கள் இப்படி பேசக்கூடாது.

Advertisement