அசால்ட்டா சதம் அடிப்பாரு, டி20 உ.கோ அணியில் யோசிக்காம அவரை தேர்வு செய்யுங்க – கிரண் மோரே ஆதரவு

Kiran-More
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா லீக் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வெற்றியுடன் துவங்கியது. ஆனால் அழுத்தமான சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று எஞ்சிய போட்டியில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே துணை கேப்டனாக விளையாடி வரும் கேஎல் ராகுல் சுமாராக செயல்பட்டு வருவது பேட்டிங் துறையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

KL Rahul

- Advertisement -

2014இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இவர் கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரையும் மிஞ்சும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். அதனால் ஐபிஎல் தொடரில் அவரது மார்க்கெட் 17 கோடி என்ற உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப காலங்களில் அணியின் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் விளையாடும் இவர் அதற்காக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார்.

ரசிகர்கள் அதிருப்தி:
அந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடரில் லக்னோவின் கேப்டனாக 400க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து அதன்பின் நடந்த தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக களமிறங்க காத்திருந்த இவர் கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் 2 மாதங்கள் இந்திய அணியிலிருந்து விலகிகினார். அதன்பின் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் குணமடைந்து அணிக்கு திரும்பிய அவர் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ஹாங்காங் போன்ற தரமற்ற கத்துக்குட்டிக்கு எதிரான பந்துவீச்சில் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடினார்.

KL Rahul Century

சூப்பர் 4 சுற்றிலும் 30 ரன்களை தாண்டாத இவர் ஐபிஎல் தொடரில் தான் அசத்துவார் இந்தியாவுக்காக சொதப்புவார் என்று விமர்சிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ள அவர் பழைய ஃபார்முக்கு திரும்ப இது போன்ற சில போட்டிகள் கால அவகாசம் தேவைப்படுவதால் விமர்சிக்கவும் அணியிலிருந்தும் நீக்கத் தேவையில்லை என சுனில் கவாஸ்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் வீரர் கிரண் மோர் டி20 கிரிக்கெட்டில் க்ளாஸ் நிறைந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் ராகுல் எந்த போட்டியிலும் எளிதாக சதமடிக்கும் திறமை பெற்றுள்ளதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் யோசிக்காமல் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆதரவு கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Rahul

“அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெரிய காயத்திலிருந்து மீண்டு கேஎல் ராகுல் அணிக்கு வந்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரரான அவர் உலகக்கோப்பையில் தேவைப்படுகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரால் எளிதாக சதங்களை அடிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அவுட்டான ஷாட்டை சற்று முன்கூட்டியே அடித்து விட்டார். இல்லையேல் அவர் பேட்டிங் செய்த விதத்திற்கு 80 – 90 ரன்களை எளிதாக எடுத்திருப்பார்”

- Advertisement -

“எனவே டி20 உலக கோப்பையில் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அவரது விஷயத்தில் நாம் எளிதாக பதற்றமடைந்து முடிவெடுக்கக் கூடாது. மேலும் நாம் ஆசிய கோப்பையை வென்று உலகக்கோப்பையை வெல்வதற்கு மிகப்பெரிய கவனம் செலுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை உலக கோப்பையை விட ஆசிய கோப்பை பெரிதானது கிடையாது. ஏனெனில் 2011க்குப்பின் நாம் எந்த விதமான உலக கோப்பையையும் வெல்லவில்லை. எனவே ராகுல் மீது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் நம்பி வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : மொத்தமாக விடைபெற்ற சின்னத்தல ரெய்னா – களமிறங்கும் புதிய தொடர் இதோ, அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

அதாவது இந்த ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டாலும் உலக கோப்பையை போன்ற பெரிய தொடரை வெல்வதற்கு கேஎல் ராகுல் இந்திய அணியில் அவசியமானவர் என்று தெரிவிக்கும் கிரண் மோர் அதனால் தற்போதைய பார்மை வைத்து அவரை உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கி விடக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement