IND vs ZIM : அவசரமாக மாற்றும் அளவுக்கு ராகுல் உயர்ந்துவிட்டாரா, தவான் – ராகுல் கேப்டன்ஷிப் பற்றிய புள்ளிவிவர அலசல்

KL Rahul Shikhar Dhawan
- Advertisement -

வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் இளம் வீரர்களை வைத்து வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்ட்டீஸை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்த ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அந்த நிலைமையில் வரும் ஆகஸ்ட் 27இல் துவங்கும் ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் காயத்தால் வெளியேறிய நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் குணமடைந்ததால் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அந்த அணி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்காக கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த தவான் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ இரவோடு இரவாக அறிவித்தது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

- Advertisement -

நியாயமற்ற முடிவு:
மேலும் காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய ராகுலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தவானை நீக்கிவிட்டு கேப்டனாக்கும் அளவுக்கு ஜிம்பாப்வே வலுவான அணியா அல்லது கேஎல் ராகுல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்தவரா அல்லது அவரைவிட ஷிகர் தவான அனுபவத்திலும் திறமையிலும் குறைந்தவரா என்ற நியாயமான கேள்விகளை ரசிகர்கள் சரமாரியாக எழுப்புகின்றனர்.

இத்தனைக்கும் 2013 முதல் ரோகித் சர்மாவின் மானசீக ஓபனிங் பார்ட்னராக விளையாடி வந்த ஷிகர் தவான் 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2018 ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த 2019 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய அவரது வாய்ப்பு பெற்ற ராகுல் அவரை விட சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

- Advertisement -

கேப்டன்ஷிப் புள்ளிவிவரங்கள்:
அதனால் 35 வயதை கடந்துவிட்ட ஷிகர் தவானை டி20 போட்டிகளில் கழற்றிவிட்ட அணி நிர்வாகம் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் – ராகுல் ஆகியோர் ஓய்வெடுத்தால் அல்லது காயம்டைந்தால் மட்டும் போனால் போகட்டும் என்று ஜிம்பாப்வே போன்ற தொடரில் கேப்டனாக வாய்ப்பளித்து அடுத்த தொடரிலேயே கழற்றிவிட்டு வருகிறது. இருப்பினும் நிதர்சனத்தை புரிந்துகொண்டு அதற்கும் சரியென்று விளையாடும் அவரை இப்படி கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்து பிடுங்கி அவமானப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றே கூறலாம். சரி அவசர அவசரமாக கொடுக்கும் அளவுக்கு ராகுல் என்ன சாதித்து விட்டார் என்பதை பற்றி பார்ப்போம்:

1. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 2020, 2021 சீசன்களில் கேப்டனாக செயல்பட்டார் என்பதுடன் இளம் வீரராக இருப்பதால் அடுத்த தலைமுறை கேப்டனை உருவாக்கும் எண்ணத்தில் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் விராட் கோலி காயமடைந்ததால் கேஎல் ராகுல் முதல் முறையாக கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

2. 1 – 0* என இந்தியா முன்னிலை வகித்த அந்த தொடரின் 2வது போட்டியில் இவரது தலைமையில் மோசமாக செயல்பட்ட இந்தியா தோல்வியை சந்தித்து பின்னர் கடைசி போட்டியில் விராட் கோலி திரும்பிய போதும் தோல்வியடைந்து 2 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் இழந்தது.

3. அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா காயமடைந்ததால் இவர் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவரது தலைமையில் 3 போட்டிகளிலும் 2வது தர இளம் தென்னாப்பிரிக்க அணியிடம் மண்டியிட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

4. அதன் தொடரில் வெங்கடேஷ் ஐயரை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துவிட்டு அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது உட்பட அவரின் மோசமான கேப்டன்ஷிப் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இதுபோக 2020, 2021 ஆகிய ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியை பிளே-ஆப் சுற்றுக்கு கூட அழைத்துச் செல்லாத இவர் 2022 சீசனில் லக்னோ அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்ற போதிலும் எலிமினேட்டரில் தோல்வியடைந்தது. மொத்தத்தில் நல்ல பேட்ஸ்மேனான ராகுல் கேப்டனாக சரிப்பட்டு வரமாட்டார் என்று ரசிகர்கள் இப்போதும் அவரின் மீது முத்திரை குத்துகிறார்கள்.

5. மறுபுறம் தோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமையில் நீண்டகாலம் விளையாடிய ஷிகர் தவான் கடந்த 2021 ஜூலையில் இலங்கை மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் இளம் வீரர்களை வழி நடத்தி 2 – 1 (3) என்ற கணக்கில் வெற்றியை பெற்று கொடுத்தார். அதன்பின் நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது.

6. அதை தொடர்ந்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் 9 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள ஷிகர் தவான் 6 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளை 83.33% என்ற அற்புதமான சராசரியில் பதிவு செய்துள்ளார்.

7. மறுபுறம் இதுவரை இந்தியாவுக்காக 4 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த ராகுல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து 0% வெற்றியை பதிவு செய்துள்ளார். இதையும் தாண்டி அவரை அவசரமாக கேப்டனாக நியமிக்க காரணம் என்னவென்று பிசிசிஐக்கே வெளிச்சம்.

Advertisement