நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
முன்கூட்டியே ஆஸ்திரேலியா பயணிக்கும் 2 வீரர்கள் :
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மாவின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இன்னும் சில நாட்களில் முதன்மை இந்திய அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்ல உள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி தற்போது ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கே.எல் ராகுல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் நாளை மறுதினம் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு காரணம் யாதெனில் : எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடர் மிகப்பெரிய தொடர் என்பதனாலும் முக்கியம் வாய்ந்த தொடர் என்பதனாலும் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ராகுல் மற்றும் ஜுரேல் ஆகியோர் முன்கூட்டியே அங்கு சென்று இந்திய ஏ அணியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அப்படி அவர்களுக்கு அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அது இந்திய அணியுடன் அவர்கள் மீண்டும் இணையும்போது பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாகவே முன்கூட்டியே ஆஸ்திரேலியா செல்லும் அவர்கள் இந்திய ஏ அணியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றனர்.
இதையும் படிங்க : தோல்விக்கு அதை காப்பியடித்த கம்பீர் தான் காரணம்.. இந்தியா டிராவிட்டை மிஸ் பண்ணுவாங்க.. பசித் அலி
அதன் காரணமாகவே அவர்கள் இருவரும் நாளை மறுதினம் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் இன்னும் 10 தினங்களில் அங்கு பயணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



