18 சிக்ஸ் 272 ரன்ஸ்.. டெல்லியை பொளந்த கொல்கத்தா.. நூலிலையில் ஆல் டைம் ரெக்கார்ட்டை தவற விட்டாலும் புதிய மாஸ் சாதனை

DC vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு பில் சால்ட் 4 பவுண்டரியுடன் 18 (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மற்றொரு துவக்க வீரர் சுனில் நரேன் தமது ஸ்டைலில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அடுத்ததாக வந்த அங்கிரீஸ் ரகுவன்சி தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி கை கொடுத்தார். அந்த வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த இந்த ஜோடியால் 7 ஓவரிலேயே 100 ரன்கள் கடந்த கொல்கத்தா அட்டகாசமான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

பொளந்த கொல்கத்தா:
அதே வேகத்தில் சுமாராக பந்து வீசிய டெல்லி பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய இந்த ஜோடியில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் சுனில் நரேன் முதல் ஆளாக 21 பந்தில் அரை சதமடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 7 பவுண்டரி 7 சிக்ஸருடன் 85 (38) ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து ஆட்டமிழந்தார்.

அவருடன் எதிர்புறம் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிய ரகுவன்சியும் டெல்லி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியாக விளையாடினார். அதே வேகத்தில் பட்டையை கிளப்பிய அவர் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் தன்னுடைய அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அரை சதமடித்து 54 (22) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 200 ரன்கள் தாண்டிய கொல்கத்தாவுக்கு அடுத்ததாக வந்த அண்ட்ரே ரசல் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். அதே போல அதிரடி காட்ட முயற்சித்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 சிக்சருடன் 18 (11) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ரிங்கு சிங் தம்முடைய பங்கிற்கு 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 26 (8) ரன்கள் தெறிக்க விட்டதால் 250 ரன்கள் கடந்த கொல்கத்தா சமீபத்தில் 277 ரன்கள் அடித்த ஹைதெராபாத் ரெக்கார்டை உடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்த ஓவரிலேயே 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 41 (19) ரன்களில் ரசலை போல்டாக்கிய இஷாந்த் சர்மா அடுத்து வந்த ரமந்தீப் சிங்கை 2 ரன்னில் அவுட்டாக்கினார். இறுதியில் வெங்கடேஷ் ஐயர் 5* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 272/7 ரன்கள் எடுத்த கொல்கத்தா நூலிலையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற ஹைதராபாத் சாதனையை உடைக்கும் வாய்ப்பை தவற விட்டது.

இதையும் படிங்க: வாங்க முடியாத திறமையான மயங் யாதவ்.. இந்தியாவுக்காக அந்த சீரிஸ்ல விளையாட வாய்ப்பிருக்கு.. ரபாடா கணிப்பு

ஆனாலும் மொத்தமாக 18 சிக்ஸர்களையும் பறக்க விட்ட ஐபிஎல் தொடரில் 2வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து கொல்கத்தா புதிய வரலாறு படைத்தது. மறுபுறம் சுமாராக பந்து வீசிய டெல்லி சார்பில் அதிகபட்சமாக நோர்டெஜ் 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

Advertisement