2024 ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – என்ன காரணம் தெரியுமா?

Jason-Roy
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனானது இன்னும் இரு வாரங்களில் துவங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக சில வீரர்கள் காயம் காரணமாகவும், சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணியிலும் ஒரு நட்சத்திர வீரர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியிலிருந்து ஷாகிப் அல் ஹசன் வெளியேறியதால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜேசன் ராய் இந்திய மதிப்பில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கொல்கத்தா அணியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இணைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அவர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு இருந்தும் இந்த தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான தகவலின் படி : இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறுவதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் ஏற்கனவே நட்சத்திர பட்டாளம் குவிந்துள்ள கொல்கத்தா அணிக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடாததால் நிதீஷ் ராணா கேப்டன்சி செய்து வந்தார்.

இதையும் படிங்க : அவரை மாதிரி ஒரு ஃபிட்டான வீரரை நான் பாத்ததே இல்லை.. சீனியர் வீரரை பாராட்டிய – பென் ஸ்டோக்ஸ்

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அவர் கொல்கத்தா அணிக்கு திரும்பியுள்ளதால் துணை கேப்டனாக நிதீஷ் ராணாவும், கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் செயல்படவுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement