- Advertisement -
ஐ.பி.எல்

மானத்தை காப்பாற்றிய டெயில் எண்டர்.. 15 ரன்னில் சொதப்பிய டெல்லியை நொறுக்கிய சால்ட்.. கேகேஆர் 6வது வெற்றி

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 47வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு பிரிதிவி ஷா 13, ஜேக் பிரேசர்-மெக்குர்க் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அப்போது வந்த சாய் ஹோப் 6 ரன்னில் வைபவ் அரோரா வேகத்தில் கிளீன் போல்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய அபிஷேக் போரல் 18 ரன்களில் ஹர்ஷித் ராணா வேகத்தில் போல்டானார். அதனால் 68/4 என தடுமாறிய டெல்லி அணிக்கு கேப்டன் ரிசப் பண்ட் 27, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 4 ரன்களில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார்கள்.

- Advertisement -

கொல்கத்தா வெற்றி:
போதாக்குறைக்கு அக்சர் பட்டேலும் 15 ரன்னில் ஆட்டமிழந்ததால் 101/7 என சரிந்த டெல்லி 180 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் டெயில் எண்டரான குல்தீப் யாதவ் அதிரடியாக 35* (26) ரன்கள் எடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்றினார். அதனால் 20 ஓவரில் டெல்லி 153/9 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3, வைபவ் அரோரா 2, ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 154 ரன்களை சேசிங் செய்த கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் – பில் சால்ட் ஜோடி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக பில் சால்ட் 15 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை டெல்லி வீரர் லிசாட் வில்லியம் கோட்டை விட்டார். அதை பயன்படுத்திய பில் சால்ட் டெல்லி பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 26 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். அந்த வகையில் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் சுனில் நரேனை 15 (10) ரன்களில் அவுட்டாக்கிய அக்சர் படேல் மறுபுறம் அடித்து நொறுக்கிய பில் சால்ட்டையும் 68 (33) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அப்போது வந்த ரிங்கு சிங் தடுமாற்றமாக விளையாடி 11 (11) ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி 33* (23) ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 26* (23) ரன்களும் எடுத்தனர். அதனால் 16.3 ஓவரிலேயே 157/3 ரன்கள் எடுத்த கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 9 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா பிளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இப்படி பேசுவது ஏமாற்றமா இருக்கு.. விராட் கோலி இல்லனா இந்தியா ஜெயிச்சுருக்குமா? இர்பான் பதான் ஆதங்கம்

மறுபுறம் பேட்டிங்கில் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்கள் எடுக்க தவறிய டெல்லி 15 ரன்னில் பில் சால்ட் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது தோல்வியை உறுதி செய்தது. அதனால் அதிகபட்சமாக அக்சர் படேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 11 போட்டிகளில் 6வது தோல்வியை பதிவு செய்த டெல்லி பிளே ஆஃப் வாய்ப்பில் பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -