- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகும் டிராவிட்.. கம்பீர் இந்தியாவின் பயிற்சியாளராக தாமதம் ஏன்? வெளியான தகவல்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடருடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே போல ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒரு வீரராக உலகக் கோப்பையை வெல்லாத அவர் பயிற்சியாளராக கோப்பையை வென்று விடைபெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இதைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். ஏனெனில் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

மாறும் பயிற்சியாளார்கள்:
அத்துடன் ஐபிஎல் தொடரில் 2012, 2014 ஆகிய வருடங்களில் கேப்டனாக கொல்கத்தா 2 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் 2024 சீசனில் ஆலோசகராக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர். அந்த வகையில் ஏராளமான அனுபவத்தைக் கொண்ட அவரை இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ கடந்த மாதமே முடிவு எடுத்துள்ளது. ஆனால் இந்த செய்தி வெளியாகி ஒரு மாதமாகியும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றி கம்பீருக்கும் பிசிசிஐ’க்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக ராகுல் டிராவிட்டுக்கு வருடத்திற்கு சுமார் வருடத்துக்கு 10 – 12 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் கௌதம் கம்பீர் அதை விட கொஞ்சம் அதிகமாக கேட்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதனாலேயே பிசிசிஐ அவரை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே அந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிய வருகிறது. இது ஒரு புறமிருக்க இந்திய அணியிலிருந்து விடைபெற்ற ராகுல் டிராவிடை தங்களுடைய பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா அணி அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இறுதிப்போட்டியில் நான் பிடிச்ச கேட்ச் என்னோட பெஸ்ட் இல்ல.. 8 வருஷத்துக்கு முன்னாடியே நான் புடிச்சிட்டேன் – சூரியகுமார் யாதவ்

கடந்த 2016 முதல் என்சிஏ இயக்குனர், அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற அனுபவத்தை பெற்றுள்ளார். எனவே கம்பீரின் இடத்தை நிரப்புவதற்கு அவரே தகுதியானவர் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் கருதுகிறது. அதனால் அவரை தங்களுடைய பயிற்சியாளராக நியமிக்க கொல்கத்தா நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -